Site icon Tamil News

சீனாவை உலுக்கிய வெள்ளம் – வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்

சீனாவின் தென் பகுதிக்கு வெள்ளம் குறித்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக நீடிக்கும் கனத்த மழை, பல்லாயிரக்கணக்கானோரை வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளது.

இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கைகளைச் செயல்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலைமை மோசமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஆறுகளில் தண்ணீரின் அளவு வெகுவாக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சில பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் சுமார் 13 செண்டிமீட்டர் மழை பதிவானது.

சீனாவின் பல இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக குவாங்டொங் மாநிலத்தின் மத்திய, வடக்குப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகக் கடும் மழை பெய்துவருகிறது..
அதன் நகர்ப்பகுதிகளில் இருந்து சுமார் 45,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

நூறாண்டுக்கு ஒரு முறை இவ்வாறான வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகச் சீனா குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version