Tamil News

ரயில்வேகேட்ல “லுங்கியுடன்” நாகேஷ் பிச்சையெடுத்தாரா?? அதுவும் இதுக்காகத்தானா….

நாகேஷ் பிச்சையெடுத்தாரா? அதுவும் பிரபலமான பின்னும் ரயில்வே கேட்டில் பிச்சையெடுத்தாரா? என்ற செய்தி வியப்பையும், ஆச்சரியத்தையும் கூட்டுகிறது.

நாகேஷை உருவாக்கியது பாலச்சந்தர் என்ற ஒரு பிம்பம் இருந்தாலும், நாகேஷூக்கான புதிய நகைச்சுவை பாதையை விரித்து வைத்தது டைரக்டர் ஶ்ரீதர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

தன்னை பற்றின குறையையும் நகைச்சுவையாகவே நாகேஷ் அணுகிய விதம் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.. ஒரு பேட்டியில், ‘மாவு அரைபட நன்றாக கொத்தப்பட்ட அம்மி தேவை… அப்படி கடவுள் என்முகத்திலும் கொத்திய குழிகள்தான், இன்று வாழ்க்கையில் நான் வளர்ந்திட காரணம்” என்றார்.

ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனும் நாகேஷும் வெளியூரிலிருந்து காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.. தொழுப்பேடு என்கிற ஊரில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் வந்து போக நேரமாகும் என்று சொன்னார்கள்.. அதுவரை என்ன செய்வது என்று நாகேஷ் ஜெயகாந்தனிடம் கேட்க, “பிச்சை எடுக்கலாம்” என்றார் ஜெயகாந்தன். “அப்படியா.. அதுவும் சரிதான்.. ஆனால் இப்படியே போய் பிச்சை எடுத்தால் யார் நம்புவார்கள்?” என்று கேட்ட நாகேஷ், காரில் இருந்து லுங்கியை எடுத்து கடகடவென கட்டிக் கொண்டு ரோட்டோரம் போய் உட்கார்ந்துவிட்டாராம்..

இதை பார்த்து மிரண்ட ஜெயகாந்தனும் அதேகோலத்தில் பக்கத்தில் உட்கார்ந்தார்..

2 பேரும் போவோர் வருவோரிடமெல்லாம் கைநீட்டி பிச்சை எடுத்தனர்… சிலர் பிச்சையும் இட்டனர்… ரயில் வந்து சென்றபிறகுதான் அந்த இடத்தைவிட்டு எழுந்தனர்..

அந்த பிச்சையில் ஜெயகாந்தனுக்குதான் நிறைய வசூல் விழுந்தது. “இதில் நீதான் ஜெயிச்சே” என்று சொல்லி, ஜெயகாந்தனை நாகேஷ் கட்டிப்பிடித்து கொண்டாராம்.

நாகேஷ் சாதி சமயத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதற்கு, ஒருமுறை அவர் ரேடியோவில் தந்திருந்த பேட்டியே சாட்சி..

“என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால்… நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணந்து கொண்டேன்… 3 பையன்கள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள்.

முதல் மகன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.. 2வது மகன் ஒரு முசல்மான் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார். 3வது மகன் ஒரு ஐயர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார்.

இப்போது எங்கள் குடும்பத்தில் எந்த குழப்பமும் இல்லை… எனக்கு சாதி மதம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும், கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும்…

பொதுவாக தேசிய விருதுகளில் காமெடிக்காக தனியாக ஒரு விருது வழங்கப்படுவதில்லை.. அப்படி மட்டும் வழங்கியிருந்தால், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நிச்சயம் விருது வாங்கி கொண்டே இருந்திருப்பார் நம்முடைய “சார்லி சாப்ளின்” நாகேஷ்..!

Exit mobile version