Site icon Tamil News

அடுத்த தேர்தலில் விரல்களுக்கு வர்ணம் பூச வேண்டியதில்லை

தேர்தல்களின் போது விரல் வர்ணம் பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடவடிக்கைகளின் போது ஆட்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரண்டு இடங்களில் வாக்களித்து பதிவு செய்தால், அவர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி, விரல்களுக்கு வர்ணம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கான செலவைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இரண்டு இடங்களில் ஒரு வாக்காளர் வாக்களித்ததன் அடிப்படையில் விரல் வண்ணம் பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

தனிநபர் பதிவு கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், இத்தொழில்நுட்பத்தின் மூலம் ஒத்த பெயர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், அடையாள அட்டை எண்கள் போன்றவற்றை சரிபார்ப்பதால், இரு இடங்களில் தனிநபரின் வாக்குகள் பதிவாவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கைவிரல் வர்ணம் பூசும் முறை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக திரு.ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version