Site icon Tamil News

ஐரோப்பாவிற்கு செல்ல முயன்று படகு கவிழ்ந்து விழுந்து! 150க்கும் அதிகமானவர்கள் மாயம்

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது,

ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது.

நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது.

படகு கவிழ்ந்ததில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆபிரிக்காவின் கடற்கரையிலிருந்து கேனரி தீவுகளுக்கு அட்லாண்டிக் இடம்பெயர்வு பாதை, பொதுவாக ஸ்பெயினை அடைய முயற்சிக்கும் ஆப்பிரிக்க குடியேறியவர்களால் பயன்படுத்தப்படுகிறது, இது உலகின் மிக ஆபத்தான ஒன்றாகும்.

மொரிட்டானிய கடலோரக் காவல்படையினர் 120 பேரைக் காப்பாற்றியதாகவும், அவர்களில் 10 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்ததாகவும் IOM கூறியது.

Exit mobile version