Site icon Tamil News

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை விரைவில் ஆரம்பம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று கடல்சார் உறவுகளை புதுப்பிக்கும் என தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் நடைபெற்ற கடலோர மாநில மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு, தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகம் இலங்கைக்கு கப்பல் சேவையை வழங்கத் தயாராகி வருவதாக குறிப்பிட்டார்.

இந்தியாவை உலக நாடுகளுடன் இணைக்கும் வகையில், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகு சேவையை தொடங்க வெவிவகார அமைச்சு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. படகு சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வளர்க்கும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இந்த சேவை வர்த்தகத்தையும் அதிகரிக்கும்.

நாகப்பட்டினம் துறைமுகம் காங்கேசன்துறைக்கான படகுச் சேவைக்கு தயாராகி வரும் நிலையில், இராமேஸ்வரனுக்கும் தலைமன்னாருக்கும் இடையில் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

1980 ஆம் ஆண்டு வரை இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று கடல்சார் உறவுகளை இந்த சேவை புதுப்பிக்கும் என அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version