Site icon Tamil News

சிங்கப்பூரில் உணவை மிக மெதுவாக உண்டதற்காக மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

சிங்கப்பூரில் 11 வயது சிறுமியின் தலையில் உடற்பயிற்சி செய்யும் பொருளை கொண்டு சிறுமியின் இரண்டாம் தந்தை தாக்கியுள்ளார்.

உணவை மிக மெதுவாக உண்டதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று நடந்த இந்த சம்பவம், கடும் மோசமான செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறுமி உணவை மெதுவாக சாப்பிட்டதால் கோபமடைந்த 29 வயதான முகமட் ஃபாஸ்லி செலமட் என்ற அந்த கொடூர தந்தை, உடற்பயிற்சி செய்யும் பொருளால் சிறுமியின் தலையில் பலமுறை அடித்துள்ளார்.

இதனால் சிறுமி மயக்கமடைந்ததாகவும், மேலும் தலை வீக்கமடைந்து ஒரு காதில் இருந்து ரத்தம் வழிந்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், சிறுமியை பெற்ற 30 வயதான தாயார் ரோஸ்லிண்டா இந்த சம்பவத்தில் எதிலும் தலையிடவில்லை. அதன் பின்னர், நவம்பர் 10 அன்று சிறுமி சுருண்டு கீழே விழுந்து இறந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டை எலும்பு முறிவுகள், விலா எலும்பு முறிவுகள், கடித்த அடையாளங்கள் மற்றும் அவரது தலை, முகம், மார்பு, இடுப்பு மற்றும் மூட்டுகளில் மழுங்கிய காயங்கள் போன்ற துன்புறுத்தல் அடையாளங்கள் சிறுமியின் உடலில் இருந்தததாக CNA தெரிவித்தது.

இந்நிலையில், பெற்றோர் இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கொலை மற்றும் ஐந்து முறைகேடான செயல்களுக்காக கொடூர தந்தைக்கு, 15 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.

சிறுமியை துன்புறுத்தியது, அவரது கணவரின் செயல்களைக் கண்டும் காணாததாகவும் இருந்ததற்காக, தாய்க்கு ஏழு ஆண்டுகள் + எட்டு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Exit mobile version