Tamil News

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன்(Photos)

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ்பெற்ற உலக புகழ் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார்.

பின்னர் சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி உள்ளிட்டவர்கள் கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஸ் நாராயணனனின் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு ரசிகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சந்தோஸ் நாராயணனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பாரிய இசை நிகழ்ச்சியை நடதவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version