Site icon Tamil News

12ம் வகுப்பு தேர்வில் தோல்வி துக்கம் தாங்காமல் விபரீத முடிவு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில்,இவர் தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய இரண்டாவது மகன் தேவா ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று பிளஸ் 2 ரிசல்ட் வந்த நிலையில் அவர் தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவில் தோல்வியடைந்தார்.

குறிப்பாக தமிழில் தோல்வி அடைந்ததால் துக்கம் தாங்காமல் வீட்டில் உள்ள சமையல் அறையில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்ட அவரது தாயார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவன் தேவாவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் தேவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர் தேவாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடியில் பிளஸ் டூ மாணவன் தேவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version