Site icon Tamil News

ரஷ்யாவின் சட்டப்பூர்வமான இலக்காக மாறும் F-16 போர் விமானங்கள்!

உக்ரைனுக்கு வழங்கப்படும் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட F-16 போர் விமானங்கள் மொஸ்கோவிற்கு சட்டப்பூர்வமான இலக்கா இருக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்த கருத்துக்கள்   மாநில செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்டது.

1,500 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடிய மற்றும் 2,002 மைல்களுக்கு மேல் செல்லக்கூடிய அதிநவீன போர் விமானங்களுக்கு உக்ரைன் நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில். உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதுன. போர் விமானிகளுக்கான பயிற்சியை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில், அதிகாரிகள் உக்ரைனின் விமானிகளுக்கு நாட்டின் நீண்டகால பாதுகாப்புத் தேவைகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் விமானங்களை வழங்குவதற்கான நேரம் இது என்ற பார்வையை நோக்கி நகர்ந்ததாக மூன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version