Site icon Tamil News

பிரான்ஸில் கடும் குளிர் – வீடற்ற நபருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் வீடற்றவர் (SDF) ஒருவரின் சடலம் வாகனம் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவ்லின் நகரில் ஜனவரி 20, சனிக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டது.

வீதியில் அவரது வாகனம் தரித்து நின்ற நிலையில், வாகனத்திற்குள் குளிர் காரணமாக குறித்த 76 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இல் து பிரான்ஸ் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், வீடற்றவர்கள் பலர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version