Site icon Tamil News

குருநாகல் முன்னாள் மேயருக்கு 3 வருட சிறைத்தண்டனை

குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த புவனேகபா ராஜ சபை மண்டபத்துடன் கூடிய கட்டிடத்தை இடித்து அகற்றியமை தொடர்பில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குருநாகல் மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண, முன்னாள் மாநகர ஆணையாளர் பிரதீப் திலகரத்ன, முன்னாள் மாநகர பொறியியலாளர் சமிந்த பண்டார அதிகாரி, பணிப் பரிசோதகர் இலலுதீன் சுல்பிகர், பேக்ஹோ இயந்திர இயக்குனர் எஸ்.பி.லக்ஷ்மன் பிரியந்த ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர், மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

Exit mobile version