Site icon Tamil News

WhatsApp குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட எலான் மஸ்க்

பயனர்களின் தரவை வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் ஏற்றுமதி ( exports ) செய்வதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அடிக்கடி தன்னுடைய எக்ஸ் வலைதள கணக்கில் வேடிக்கையான விஷயங்களை பதிவிடுவதும், பயனர்களுக்கு பதில் அளித்தும் வருவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், பயனர் ஒருவர் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் பற்றி குற்றச்சாட்டை முன்வைத்த ஒரு கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் பயனர் ஒருவர் ‘வாட்ஸ் அப் நிறுவனம் விளம்பர நிறுவனங்களுக்கு பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் ‘சாட்’ (chat) களையும் விற்பனை செய்கிறது” என்று கூறியிருந்தார்.

பயனர் கூறிய அந்த கருத்துக்கு எலான் மஸ்க் ” வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் உங்கள் பயனர் தரவை ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ்அப் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மெட்டாவுக்கு சொந்தமாக இருக்கும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிக்கு எக்ஸ் வலைதளம் போட்டியாக இருப்பதாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனாலே, மெட்டா உரிமையாளர் மார்க் ஸுகர்பெர்க்குக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே சின்ன பனிப்போர் இருந்து வருகிறது. இந்த சூழலில் எலான் மஸ்க் வாட்ஸ்அப் குறித்து இப்படி கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

 

Exit mobile version