Site icon Tamil News

எங்களுடன் போட்டி போடுவது வீண் – ChatGPT CEOவின் அதிரடி அறிவிப்பு

ChatGPTயை உருவாக்குவது உங்களால் முடியாத காரியம் என Open AI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

Open AI, Chat GPT தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார்.

அப்போது அவரிடம் PeakXV Partners இன் நிர்வாக அதிகாரி ராஜன் ஆனந்தன், OpenAI மற்றும் ChatGPT போன்றவற்றை உருவாக்குவது குறித்து கேட்ட போது, ChatGPT போன்ற மாதிரியை உருவாக்க முயற்சிப்பது உங்களைப்போன்ற ஸ்டார்ட் அப்- களுக்கு பலன் தராது என்று கூறினார்.

இது குறித்து தற்போது சமூக ஊடகங்களில் அவரது கருத்துகள் பரபரப்பாக பேசப்படுகின்றன. சாம் ஆல்ட்மேன் தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது நிறைய கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் முக்கியமாக அவர், இந்திய நிறுவனங்கள் சாட் ஜிபிடியை உருவாக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.

ஓபன்ஏஐ ஏற்கனவே சாட் ஜிபிடியை உருவாகிவிட்டதால் அதனுடன் போட்டியிட விரும்பும் நிறுவனங்கள் ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எங்களுடன் போட்டியிடுவது உங்களுக்கு வீண் முயற்சி, நீங்கள் முயற்சி செய்யலாம் அது உங்கள் வேலை, ஆனால் அது பலன் தராது என்று மேலும் கூறினார்.

Exit mobile version