Site icon Tamil News

எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு – பயனர்களுக்கு அதிர்ச்சி!

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதாவது, ட்விட்டர் பெயரை எக்ஸ் என்று மாற்றியது, ஊழியர்கள் குறைப்பு, பணம் கொடுத்து பிரிமியம் அக்கௌன்ட் உள்ளிட்ட பல மாற்றங்களை செய்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் எதன் யாகுவை எலான் மஸ்க் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலின் போது, செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் எதன் யாகு, “கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக போராடுவதற்கும் இடையே ட்விட்டரின் சமநிலையை ஏற்படுத்துமாறு எலான் மஸ்க்கை கேட்டுக் கொண்டார்.

இதற்கு எலான் மஸ்க், போலி கணக்குகளின் நடமாட்டமே காரணம் என்றும், இதனை தடுக்க வரும் காலத்தில் எக்ஸ் தளத்தை முழுமையான கட்டண வலைத்தளமாக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எக்ஸ் இணையதளத்திற்கு ஒரு கட்டண சுவரை அமைப்பதன் மூலம் தான் போலி கணக்குகளை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, பிரிமியம் சேவைகளுக்கு மட்டுமே பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் கூடிய விரைவில் ட்விட்டரை 100% கட்டண வலைதளமாக மாற்ற மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version