Site icon Tamil News

EG.5 வைரஸ் அச்சம் தரக்கூடிய அளவில் இல்லை – WHO

சீனா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வரும் EG.5 கொரோான வைரஸ் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

கொரோனா தொற்றின் புதிய  மாறுபாடு, அமெரிக்காவில் 17% க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் திரிபு,  சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா போன்றவற்றிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், “ஒட்டுமொத்தமாக, தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற Omicron வம்சாவளி பரம்பரைகளுடன் ஒப்பிடும்போது EG.5 கூடுதல் பொது சுகாதார அபாயங்களைக் கொண்டுள்ளது என்று கிடைக்கக்கூடிய சான்றுகள் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version