Site icon Tamil News

அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிப்பதற்கான முயற்சிகள் தீவிரம்

அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது.

TikTok செயலியை நிர்வகிக்கும் சீனாவின் Byte-Dance நிறுவனத்தின் உரிமப் பங்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்டமூலத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிக்கவிருக்கிறது.

உக்ரேன், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தொகுப்புத் திட்டத்துடன் TikTok விலக்கல் சட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் மீது அமெரிக்க நாடாளுமன்றம் நாளை வாக்களிக்கவுள்ளது.

TikTok தடைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், செனட் சபையிலும் அது துரிதமாக நிறைவேற்றப்படும். ஜனாதிபதி கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

அது நிறைவேற்றப்பட்டால், ByteDance நிறுவனம் 6 மாதங்களுக்குள் TikTokஐ விற்றாக வேண்டும் அல்லது அது தடையை எதிர்கொள்ள நேரிடும்.

 

Exit mobile version