Tamil News

சீனாவில் பொருளாதார மந்தநிலை ; அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சீனாவில் பொருளாதார செயல்பாடுகள் சற்று மந்தமாகியுள்ளதால் அடுத்த புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடு முடிவெடுத்துள்ளது.
அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை(ஜீலை15) தொடங்கி 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதில் சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்து 376 உறுப்பினர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கால நவீன தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்தி நாட்டை வேகமாக முன்னேற்றும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. சீனாவின் இந்த நடவடிக்கையை உலகமே எதிர்பார்க்கிறது.ஏனொனில் உலகின் பல்வேறு பொருள்களின் உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் திகழும் சீனாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

China Is Holding a Major Meeting on the Economy That You Can't Watch - The  New York Times

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனாவில் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருள்கள்,சேவைகளுக்கான தேவை குறைந்ததும் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலும் தான் சீனாவின் பொருளாதாரம் மந்தமடையை முக்கிய காரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருவது கவலை தரும் பிரச்சனையாக அந்நாட்டுக்கு உருவெடுத்துள்ளது.

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறும் பொருளாதார சீர்திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சீன நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்ட இருக்கிறது. முக்கியமாக சீன தயாரிப்பு நவீன மின்னணுப் பொருள்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட இருக்கிறது.

Exit mobile version