Site icon Tamil News

கிட்டப்பார்வை மற்றும் தூர பார்வையை சரி செய்ய இலகுவான வழிகள்!

மாறிவரும் இந்த நவீன உலகில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அதிகம் நேரம் நம் கண்கள் செல்போன், கணினி, டிவி போன்றவற்றை தான் பார்க்கிறோம். இதனால் மிகச் சிறிய வயதிலேயே கண் கண்ணாடி போடும் நிலை வந்துவிட்டது. இதனை சரி செய்ய இந்தப் இரண்டு குறிப்புகளை பயன்படுத்தினாலே போதும் அது என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பாதம் பருப்பு =20
சோம்பு =1 ஸ்பூன்
கட்டி கற்கண்டு =1 ஸ்பூன் [சிறிய கற்கண்டு பயன்படுத்த வேண்டாம்

செய்முறை:

பாதாம் பருப்பு ,சோம்பு, கட்டி கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும், தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். பசும் பாலில் இதை இரண்டு ஸ்பூன் அளவு கலந்து ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டாமல் தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வரவும். முதலில் ஒரு பத்து நாட்கள் மட்டும் குடித்து வந்தாலே நல்ல வித்தியாசம் தெரியும். பின்பு வேண்டுமானால் நீங்கள் தொடர்ந்து குடித்து வரலாம். இதனால் எந்த பக்க விளைவும் இல்லை. இனிப்பு சுவை குறைவாக இருந்தால் கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு பசு நெய்யை கால் டீஸ்பூன் எடுத்து கால் பாதத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்து வரவும். அதிக அளவு நெய்யை காலில் தேய்க்க கூடாது. சிறிதளவு தேய்த்தாலே போதும். இரண்டு கைகளிலும் மடக்கும் பகுதியில் இரண்டு சொட்டு நெய்யை தேய்த்து மசாஜ் செய்து விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் கண் நரம்புகள் வலுபெறும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

இந்த இரண்டு குறிப்புகளையும் தொடர்ந்து செய்து வரும்போது கண் எரிச்சல் ,கண் வலி பார்வைத்திறன் மங்குவது, உடல் சூடு போன்றவை விரைவில் குணமாகும்.

 

Exit mobile version