Site icon Tamil News

பளிச் சருமம் பெறத் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டுமா? பல வருடத்தின் மர்மத்திற்கான பதில்

பளிச் என்ற சருமம் பெறுவதற்காகத் தினமும் சுமார் 3.5 லிட்டர் தண்ணீர் அருந்துவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அந்த வரிசையில், பிரபலங்கள் பலர் தங்களின் ஆரோக்கியமான, மென்மையான சருமத் தோற்றத்திற்குத் தண்ணீர் தான் காரணம் என்கின்றனர்.

பொதுவாகவே, உடல் ஆரோக்கியத்திற்குப் போதிய அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம். ஆனால், அதிகமாகத் தண்ணீர் குடித்தால், அது சருமப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என தெரியவந்துள்ளது.

KK மகளிர், குழந்தை மருத்துவமனையில் பணிபுரியும் தோல் மருத்துவர் உமா அழகப்பன் இதற்கான பதிலை வழங்கியுள்ளார்.

தண்ணீர் அதிகமாகக் குடித்தால், அது நேரடியாகச் சருமத்திற்குச் செல்லும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மாறாக, தேவையற்ற நீரை வெளியேற்றுவதற்காக, சிறுநீரகம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று டாக்டர் அழகப்பன் தெரிவித்தார்.

சருமத்தின் நீர்ச்சத்தை (hydration) மேம்படுத்த அடிக்கடி moisturisers பயன்படுத்துவது சிறந்த வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், தினமும், பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பதே நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version