Site icon Tamil News

இலங்கையில் அறிமுகமாகும் E-Passport சேவை

இலங்கையில் E-Passport சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போது நிலவும் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E-Passport சேவையை அறிமுகம் செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம்.

கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக வரிசைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

அந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் வெளிநாட்டு கடவுசீட்டு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version