Site icon Tamil News

போதையில் நடுரோட்டில் உறக்கம்

கோவை பார்க் கேட் நேரு உள்விளையாட்டு அரங்கம் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

இங்கு பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு சாலையோர பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், பழக்கடைகள், டீக்கடைகளும் இயங்கி வருகின்றன.

காலை மற்றும் மாலை வேலைகளில் இப்பகுதியில் அதிகமானோர் நடைபயணம் மேற்கொள்வர்.

குறிப்பாக இப்பகுதியில் வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம் ஆகியவை இருப்பதால் மாலை வேலைகளில் குழந்தைகளுடன் பெரியவர்கள் குடும்பம் குடும்பமாய் அப்பகுதியில் பொழுதை கழிப்பர்.

எனவே இப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும்.

இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே அதிக மது போதையில் ஒருவர் நடு ரோட்டில் படுத்து உறங்கியுள்ளார்.

முதலில் அவரே எழுந்து விடுவார் என்று பலரும் எண்ணிய நிலையில் அவர் எழுந்திரிக்காமல் உறங்கி கொண்டே இருந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள், கடைக்காரர்கள் அவரை எழுப்ப முற்பட்டனர்.

அப்போது அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்ததாலும் அதிக மது போதையில் இருந்ததாலும் அவரால் எழுந்து நிற்க இயலாமல் போனது.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்களே அவரை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர்.

மது போதையில் நடு ரோட்டில் படுத்து உறங்கிய நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Exit mobile version