Tamil News

அணு ஆயுத சோதனை தொடர்பில் மேற்கு நாடுகளின் பார்வை பற்றி கவலையில்லை; ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம்

ரஷ்யா, பெலாரஸில் அணுகுண்டுகளை நிலைநிறுத்துவதை மேற்கு நாடு எவ்வாறு பார்க்கிறது, என்பதை பற்றி ரஷ்யா பொருட்படுத்தவில்லை என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, பெலாரஸில் தந்திரோபாய அணு ஏவுகணைகளை நிலைநிறுத்த மேற்கு நாடுகள் என்ன நினைக்கின்றன, என்பதை பற்றி மாஸ்கோ பொருட்படுத்தவில்லை என்று மூத்த ரஷ்ய தூதர் ரஷ்ய ஊடகமான TASS க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதப் பரவல் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் விளாடிமிர் யெர்மகோவ் கருத்துப்படி, ரஷ்யா மற்றும் பெலாரஸில் ஆகிய இரு நாடுகளின் சொந்த பாதுகாப்பு தான் முக்கியமானதென தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் யூனியன் ஸ்டேட் என்ற பாதுகாப்பயே நாங்கள் விரும்புகிறோம், அதுவே எங்களுக்கு பிரதானமும் கூட என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவில் அமெரிக்கா அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து,  நேட்டோ நாடுகள் பல ஆண்டுகளாக அக்கறை செலுத்துவதை போலவே, நாங்கள் அதனைப் பற்றி கவலைப்படுகிறோம் என்று விளாடிமிர் யெர்மகோவ் கூறியுள்ளார்.

Vladimir Putin, Alexander Lukashenko/ விளாடிமிர் புடின், அலெக்சாண்டர் லுகாஷென்கோ

உண்மையில், அமெரிக்கா பல தசாப்தங்களாக அதன் அதிகார வரம்புகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் பல அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. எனவே அதன் நேட்டோ நாடுகள் ரஷ்ய அல்லது பெலாரஷ்ய மண்ணில் தாக்குதல் நடத்த சாத்தியம் இருப்பதால் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.’இதனால் இரு நாடுகளும் இணைந்து எங்களை தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு பகுதியை உருவாக்குகிறோம்’ என்று யெர்மகோவ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி ஐந்து யூரேசிய நாடுகளில் உள்ள ஆறு இராணுவ தளங்களில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் அது அமெரிக்காவின் பெயரிலில்லை என கூறியுள்ளது.

Exit mobile version