Site icon Tamil News

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டாம் – மத்திய வங்கி அறிவுரை

பணமோசடியை தடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அண்மையில் ரியல் எஸ்டேட் துறைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

ரியல் எஸ்டேட் துறையில் பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுப்பது போன்ற பொறுப்புகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதன் மூலம் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் அபாயங்களை குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்காக நிதி புலனாய்வு பிரிவு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் ரியல் எஸ்டேட் துறையின் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் துறையில் இணக்கத்தின் அளவை மேம்படுத்துவதற்காக, ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை, அத்துறையின் ஒழுங்குமுறை அதிகாரிகளின் பல பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறு விழிப்புணர்வு திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version