Site icon Tamil News

போலந்து புதிய பிரதமராக டொனால்டு டஸ்க் பதவியேற்பு

போலந்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், டஸ்க் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம், போலந்தில், சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் 8 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலந்து அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டொனால்டு டஸ்க்குக்கு, போலந்து அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் சேர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Exit mobile version