Site icon Tamil News

இலங்கை பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் வைத்தியரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு பெரசிட்டமோல் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு விவரங்கள் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன இதனை வலியுறுத்துள்ளார்.

சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு அதிக அளவிலான பெரசிட்டமோல் கொடுப்பதனால் வைத்தியசாலைகளில் பல குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது.

வைத்தியர்களின் பரிந்துரைகளில் பெரசிட்டமோல் மருந்தைக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பெரசிட்டமோல் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மோசமான நிலைக்குள்ளாகும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டறிந்தால் பெரசிட்டமோலை அதிக அளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க வேண்டும்.

இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version