Site icon Tamil News

மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் 23வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், மதுபானம் தொடர்பில் நாட்டில் உள்ள சில சட்டங்களும் மக்களை சட்டவிரோத மதுபானத்திற்கு திரும்புவதை ஊக்குவிக்கின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத மதுபானங்களின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த 20 வருடங்களில் சட்டப்பூர்வ மதுபானம் 50% அதிகரித்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபானம் 500% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுபானக்கடைகள் பரவியமையும் இந்நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6000 பேருக்கு ஒரு மதுபானக் கடை உள்ளது, ஆனால் கண்டி மாவட்டத்தில் 9,90,000 பேருக்கு ஒரு மதுபானக் கடை உள்ளது. .சில பகுதிகளில், மதுபானக் கடையைக் கண்டுபிடிக்க மக்கள் சுமார் 80 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

Exit mobile version