Site icon Tamil News

மிரள வைக்கின்றது ‘டிமான்டி காலனி 2’ – வெளியானது ட்ரைலர்

அருள்நிதி நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படத்தின் வெற்றியை  தொடர்ந்து, ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் உருவாகி உள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திலும், நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், சஞ்சனோ கார்லிக், அர்ச்சனா ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிமான்டி காலனியை விட்டு மீண்டும் வெளியே வந்த செயின் எப்படி உள்ளே போகிறது என்பதை மையமாக வைத்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

Exit mobile version