Tamil News

‘குஷி’ படத்தின் முதல்நாள் வசூல் விபரங்கள் வெளியாகின…

சமந்தா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்து நேற்று வெளியான படம் ‘குஷி’. இந்த படத்தை ஷிவா நிர்வானா இயக்கியிருந்தார்.

பான் இந்திய படமாக வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான குஷி படம் முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் 30 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

படம் வெளியான முதல் நாளில் இத்தனை கோடி வசூலித்துள்ளது படக்குழுவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமந்தாவின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் சமந்தா நடிப்பில் வெளியான வரலாற்று படமான ‘சகுந்தலம்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதனால் குஷி படம் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று ரசிகர்கள் அதிகமாக நம்பிக்கையுடன் இருந்தனர்.

படத்தில் ரோகினி, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த காதல் கதைகளத்தில் உருவான குஷி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version