Site icon Tamil News

ஜெர்மனியில் அகதிகளின் விண்ணப்பங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

ஜெர்மனியில் அகதிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஜெர்மன் அரசாங்கம் ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய பல நடைமுறைகளை கையாண்டு வருகின்றது.

இந்நிலையில் ஜெர்மனி சான்ஸ்லர் ஓலா சொல்ஸ் அவர்கள் அகதி விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்கின்ற முண்டசமம் என்று சொல்லப்படுகின்ற சமஷ்டி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு விஜயம் செய்த சான்ஸ்லர் பல விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அகதி விண்ணப்ப விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவை அகதிகள் விண்ணப்ப விசாரணைகளில் பயன்படுத்தினால் சில முறைகேடுகள் நடைபெறலாம் என்று இந்த விடயம் தொடர்பான் நிபுணர்கள் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அடிப்படை மனித உரிமை விடயத்தில் அரசாங்கமானது கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் இந்த விடயத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version