Site icon Tamil News

சீனாவில் தலிம் சூறாவளி தாக்கம் : ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!

சீனாவில் தலிம் சூறாவளியால் கரையோரபகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் நான்காவது சூறாவளியான தலிம் சூறாவளியால்,  மணிக்கு 136.8 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளிக்கு முன்னதாக,  ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  குவாங்டாங்கில் உள்ள கிட்டத்தட்ட 230,000 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன்  மீன் பண்ணைகளில் இருந்து 8,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

Exit mobile version