Site icon Tamil News

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கணக்குகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ட்ரம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் செய்தி தொடர்பாளர்கள் சைபர் தாக்குதலை ஈரான் நடத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அமெரிக்க வாக்காளர்களை குறிவைத்து போலியான செய்திகளை விநியோகிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு செலுத்த அல்லது கண்காணிக்க ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரச்சாரத்தின் செய்தி தொடர்பாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்தில் இருந்து ஆவணங்கள் அடங்கிய கணக்கிற்கு அநாமதேய கணக்கிலிருந்து மின்னஞ்சல் வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சைபர் தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பு என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக, டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் அரசு அதை மறுத்தது.

Exit mobile version