Site icon Tamil News

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு காத்திருக்கும் நெருக்கடி

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், சோனேபர்க் என்ற நகரத்தில் நடந்த தேர்தலில், ஏ.எப்.டி., கட்சி வென்றுள்ளமையினார் புலம்பெயந்தோருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதென தெரியவந்துள்ளது.

கடந்த 2013ல் துவக்கப்பட்ட இந்தக் கட்சி, புலம்பெயர்ந்து வந்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தக் கொள்கை, ஜெர்மனி மக்களிடையே பிரபலமானது. இதையடுத்து, இந்தக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகத் துவங்கியது. சமீபத்தில் சோனேபர்க் நகரத்தில் நடந்த தேர்தலில், இந்தக் கட்சி வென்றுள்ளது.

அடுத்தாண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்தக் கட்சிக்கு, 20 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதனால் புலம்பெயந்தோருக்கு நெருக்கடி ஏற்படும் அறிகுறிகள் உள்ளதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள சி.டி.யு., எனப்படும் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிக்கு, 28 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான இடதுசாரி கட்சியான எஸ்.பி.டி., எனப்படும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு, 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துஉள்ளனர். கடந்த சில மாதங்களில் நடந்த கருத்துக் கணிப்புகளில், மதவாத ஏ.எப்.டி., கட்சிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

Exit mobile version