Site icon Tamil News

2028ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைப்பு

2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) முடிவு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி 100 வருடங்களின் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இது குறித்து இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்கியது.

பின்னர், மும்பையில் நடைபெற்ற அமர்வுக்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த முடிவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version