Site icon Tamil News

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சண்டையிட்டுக்கொள்ளவில்லை

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தீர்க்கமான அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும், வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவல் பொய்யானது என்றும், இவை அனைத்தும் வதந்திகள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“அணியின் கவனம் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது. விமர்சனங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு போட்டியில் தோற்றால், வர்ணனையாளர்களுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும்.

குழு கூட்டத்தில் அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் வார்த்தை மோதல் ஏற்பட்டது உண்மையல்ல. அனைவரும் ஒன்றாக கூட்டத்தை விட்டு வெளியேறினர்’’ என்றார்.

Exit mobile version