Site icon Tamil News

Credit Suisse வங்கி அதிகாரிகளுக்கு சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி

Credit Suisse வங்கி சமீபத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்த விடயம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Credit Suisse வங்கி அதிகாரிகள் சந்திக்கவிருக்கும் பெரிய இழப்பு இந்நிலையில், Credit Suisse வங்கியில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு முழு போனஸ் வழங்கப்படாது என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, வங்கியின் மூத்த அதிகாரிகளின் போனஸ், 50 சதவிகிதம் வரையும், மூத்த மேலாளர்களின் போனஸ், 25 சதவிகிதம் வரையும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், அவ்வங்கி, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அதாவது, கடந்த 12 ஆண்டுகளில், பெற்ற இலாபத்தைவிட அதிக தொகையை போனஸாக வழங்கியதாக கூறப்படுகிறது.Bloomberg நிறுவனத்தின் கணிப்பின்படி, அந்த காலகட்டத்தில், 35 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே இலாபம் கிடைத்த நிலையிலும், 35 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை தன் ஊழியர்களுக்கு வருடாந்திர போனஸாக வழங்குவதற்காக ஒதுக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

சமீபத்தில் வங்கியில் நடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில், இந்த விடயம் தொடர்பிலான பிரச்சினை எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது அரசு எடுத்துள்ள முடிவால், வங்கி ஊழியர்கள் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட உள்ளார்கள்.

ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் இன்னொரு விடயம் என்னவென்றால், ஏற்கனவே அவர்கள் வாங்கிய போன்ஸையும் திருப்பிக் கொடுக்குமாறு ஊழியர்களிடம் வங்கி கேட்கமுடியுமா என்பதையும் கருத்தில் கொள்ளுமாறு அரசு, Credit Suisse வங்கியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Exit mobile version