Tamil News

முன்னாள் கணவரை முகநூலில் இழிவுபடுத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

கனடாவில் சமூக ஊடகத்தில் முன்னாள் கணவனை இழிவு படுத்திய முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.வடக்கு ஒன்றோரியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு ஒன்றாரியோ உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தனது முன்னாள் கணவர் பற்றி சமூக ஊடகங்களின் வாயிலாக பொய்யான மற்றும் இழிவுபடுத்தக்கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.முன்னாள் கணவர் போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும், பிள்ளைகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார் எனவும், குடும்பத்தை கைவிட்டு விட்டார் எனவும் சமூக ஊடகத்தில் குறிப்பாக முகநூல் ஊடாக அந்தப் பெண் பிரச்சாரம் செய்திருந்தார்.

UAE: Woman acquitted of insulting, posting photos of ex-husband's wife  online - News | Khaleej Times

தமக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்வதாகக் கூறி நீதிமன்றில் குறித்த நபர் அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார்.எனினும் விசாரணைகளின் போது இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த பெண் அவதூறு பிரச்சாரம் செய்தமை கண்டறியப்பட்டதனால் நீதிமன்றம் குறித்த பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ளது.

குறித்த பெண் இந்த அவதூறு பிரச்சாரத்தை வியாபார நிறுவனத்தின் முகநூல் கணக்கில் பிரச்சாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் குறித்த வியாபார நிறுவனத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானம் பாரியளவு சரிவினை கண்டதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையில் குறித்த பெண் இழப்பீடாக 50,000 டொலர்களையும், அபராதமாக 25000 டொலர்களையும் நீதிமன்றச் செலவாக மேலும் 12000 டொலர்களும் மொத்தமாக 87000 டொலர்களை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version