Site icon Tamil News

மலேசியாவில் தம்பதியனர் கைது : விசாரணைகளின் வெளிவந்த முக்கிய தகவல்கள்!

உளவுத்துறை முகவர் என சந்தேகிக்கப்படும் இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விநியோகம் செய்த சந்தேகத்தின்  பேரில் மலேசிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் மலேசியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன்நிமித்தம் மன்னர், பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் பிற தலைவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் மார்ச் 27 அன்று 36 வயதான இஸ்ரேலியர் கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பயணம் செய்து மார்ச் 12 அன்று பிரெஞ்சு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் மேலதிக விசாரணையின் பின்னர் இஸ்ரேலிய கடவுச்சீட்டை ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version