Site icon Tamil News

மக்களின் பலம் மற்றும் ஆசிர்வாதத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் – அனுர

இலங்கை தனது வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்திற்கும் அதிகாரப் போட்டிக்கும் வந்துள்ளதாகக் கூறியுள்ள ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அந்தப் போராட்டத்தில் தாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜே.வி.பி மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான நிலைமையை வெறும் சீர்திருத்தங்களினாலோ அல்லது சட்டங்களினூடாகவோ தீர்க்க முடியாது எனவும், ஊழல் ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை மக்களிடம் வழங்குவதன் மூலமே அதனைச் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யால் நாடு முழுவதிலும் உள்ள மக்களை வடக்கிலிருந்து தெற்கிலும் கிழக்கிலிருந்து மேற்கிலும் ஒன்றிணைக்க முடிந்துள்ளதாகவும், ஏனைய கட்சிகள் வடக்கு அல்லது தெற்கே என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் எங்கு சென்றாலும், மக்கள் எங்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் எங்களை நம்புகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் முன் எப்போதும் இல்லாத வகையில் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“இன்று அனைத்துத் துறை மக்களும் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். விவசாயிகள், மீனவ சமூகம், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரிக்கிறார்கள். அவர்கள் எங்களை அதிகம் நம்புகிறார்கள். மக்களின் பலத்துடனும் ஆசீர்வாதத்துடனும் இந்த நாட்டை முன்னேற்ற முடியும்” என்று அவர் கூறினார். .

Exit mobile version