Site icon Tamil News

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – அதிர்ச்சியில் சுகாதார பிரிவு

அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதனால் சுகாதார பிரிவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவித்துள்ளது.

தற்பொழுதுள்ள தகவலின் படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.

இது கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டை விட சற்று உயர்ந்துள்ளது. இந்த வருடம் ஜூலை 15 அன்று 7,100 க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரங்களில் 6,444 ஆக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஜூலை 21 நிலவரப்படி, ஒரு மாதத்திற்கு முன்னதாக 0.49% ஆக இருந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, சுமார் 0.73% ஆக அதிகரித்துள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து கூறிய சிடிசியின் டாக்டர் பிரெண்டன் ஜாக்சன், கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களாக குறைந்திருந்த கோவிட் தொற்று மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளது.

இது கடந்த பல வாரங்களாக உயர்ந்து வருவதை நாங்கள் கண்டோம். நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்முறையாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும் அதிகரிப்பதைக் கண்டோம் என்று கூறியுள்ளார்.

Exit mobile version