Site icon Tamil News

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சிங்கப்பூரில் கடந்த ஒரே வாரத்தில் புதிதாக 32,035 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம் என அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்து, எச்சரித்துள்ளது.

2019ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது. இதனால் பல நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ’’கடந்த ஆண்டை போல இன்னொரு கொரோனா அலை இங்கு வரலாம். எனவே முகக் கவசம், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்’’ என அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version