Site icon Tamil News

சிங்கப்பூரில் பெண்ணை தாக்கியவருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் பெண்ணை தாக்கியவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

57 வயதுப் பெண்ணை நோக்கி இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தி அவரைத் தாக்கிய நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு நடந்த அந்தச் சம்பவத்துக்காக, 32 வயதுச் சிங்கப்பூரர் வோங் சிங் ஃபோங்கிற்கு (Wong Xing Fong) அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹிந்துச்சா நீட்டா விஷ்ணுபாய் (Hindocha Nita Vishnubhai) என்னும் பெண்மணியை இனவாத நோக்கில் அவர் திட்டித் துன்புறுத்திய குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

விரைவுநடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திருவாட்டி நீட்டா முகக்கவசம் அணியவில்லை என்பதைக் காரணம் காட்டி வோங் அவரைத் திட்டியதோடு மார்பில் எட்டி உதைக்கவும் செய்தார்.

தாக்குதலால் கீழே விழுந்த நீட்டாவுக்குப் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அந்தச் சம்பவம் குறித்த தகவல் ஊடகங்களில் வெளியானது

இதன் போது, பிரதமர் லீ சியென் லூங், சட்ட-உள்துறை அமைச்சர் கா. சண்முகம் உள்ளிட்ட சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் சிலர் அதிருப்தியும் ஏமாற்றமும் தெரிவித்திருந்தனர்.

Exit mobile version