Site icon Tamil News

மீண்டும் சர்ச்சை – தென்கொரியாவை நோக்கி குப்பை நிரம்பிய பலூன்களை அனுப்பிய வடகொரியா

தென்கொரியாவை நோக்கி மேலும் நூற்றுக்கணக்கான குப்பை நிரம்பிய பலூன்களைப் பறக்கவிட்டு வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 நாள்களில் அத்தகைய கிட்டத்தட்ட ஆயிரம் பலூன்களை அது தென்கொரியா பக்கம் அனுப்பியது.

அவற்றில் சுமார் 100 பலூன்கள் தலைநகர் சோலையும் (Seoul) வடக்கில் உள்ள கியோங் கி (Gyeong-gi) மாநிலத்தையும் சென்றடைந்துள்ளன. பலூன்களில் பெரும்பாலும் தாள்களும் பிளாஸ்டிக் கழிவுகளும் இருப்பதாகத் தென்கொரிய ராணுவம் கூறுகிறது.

பொதுமக்களுக்கு அவற்றால் ஆபத்து ஏதும் இல்லை என்றும் அது குறிப்பிட்டது. கடந்த மே மாதத்தில் இருந்து வடகொரியா குப்பை நிரம்பிய கிட்டத்தட்ட 5,000 பலூன்களைத் தென்கொரியாவுக்குள் பறக்கவிட்டுள்ளது.

வடகொரியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வோர் தனது எல்லைக்குள் பிரசார வாசகங்களைக் கொண்ட பலூன்களைப் பறக்கவிட்டதற்குப் பதில் நடவடிக்கையாக இவ்வாறு செய்வதாக பியோங்காங் கூறுகிறது.

Exit mobile version