Site icon Tamil News

மலேசியாவில் கையடக்க தொலைபேசி சார்ஜருக்காக அடித்துக் கொல்லப்பட்ட மாணவன்

மலேசியாவில் தொழிற்கல்லூரியில் தவறான புரிதல் காரணமாக விடுதி மாணவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

17 வயதான மாணவர் ஒருவர் நேற்றைய தினம் தங்கும் அறை ஒன்றில் காலை 6.50 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கல்லூரி இயக்குனரிடம் இருந்து பொலிஸார் அறிக்கை பெற்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர், என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒரு அறிக்கையில் கூறினார்.

முதற்கட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, தங்கும் அறை ஒன்றின் தரையில் மயங்கிய நிலையில் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் மற்றும் இரத்த கசிவுகள் இருந்தன. பாதிக்கப்பட்ட மாணவனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலால் மோதல் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது தாக்குதலுக்குள்ளான மாணவன் உயிரிழந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 முதல் 19 வயதுக்குட்பட்ட 13 மாணவர்கள், விசாரணைகளை எளிதாக்கும் வகையில் கைது செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி சார்ஜரும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி சார்ஜர் ஒன்றிற்காகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றன.

 

Exit mobile version