Site icon Tamil News

சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் நாமல் ராஜபக்சவுடன் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்தும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மற்றும் சர்வதேசத் துறையின் பிரதி அமைச்சர் சன் ஹெயன் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென்ஹோன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்களின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி நடைமுறை அரசியல் போக்கை உருவாக்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

Exit mobile version