Site icon Tamil News

சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1949ஆம் ஆண்டில் இருந்த 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

இருந்தாலும், இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடலுழைப்புத் தொழிலுக்கு 50 வயது) என்ற நிலையில் மாற்றமில்லை.

இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு வயது வரம்பை இன்னும் 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65-ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Exit mobile version