Site icon Tamil News

சீனா: மரியாதை தராத கடை ஊழியர்… வித்தியாசமாக பழிவாங்கியப் பெண்!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்சிங் வட்டாரத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் தலைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.

‘ஸ்டார்லைட்’ கடைத்தொகுதியில் உள்ள லூயி விட்டான் கடையில் ஆடம்பர பொருள்களை வாங்கச் சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த ஊழியர் ஒருவரை பழிவாங்கும் எண்ணத்தில் யாரும் எதிர்பார்க்காத செயல் ஒன்றை செய்துள்ளார்.

தமக்குப் பிடித்த பொருள்கள் சிலவற்றை வாங்கிய அவர் ரொக்கமாக பணத்தைத் தருவதாக கடை ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.பெண் வாங்கவுள்ள பொருள்களின் விலையோ 600,000 யுவான் (S$110,000). வாடிக்கையாளர் கொடுத்த ரொக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த கடை ஊழியர் எண்ணினார்.

கடை ஊழியர் ரொக்கத்தை எண்ணிய பிறகு தமக்கு மனம் மாறிவிட்டது பொருள்கள் வாங்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு ரொக்கத்தை திரும்பெற்றுக்கொண்டு கடையைவிட்டு வெளியேறினார் அந்தப் பெண்.வாடிக்கையாளரின் இந்த நடவடிக்கையால் கடை ஊழியருக்கு பெரும் அதிர்ச்சியடைந்தார்.

தமது செயலை சமூக ஊடகத்தில் பதிவிட்ட வாடிக்கையாளர், இது பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாம் அந்தக் கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றதாகவும் கடை ஊழியர்கள் தமக்கு தகுந்த கவனிப்பும் மரியாதையும் தரவில்லை என்றும் குறிப்பிட்டார்.குடிக்க ஏதும் தரவில்லை. இவ்வாண்டு வெளியான புதிய ஆடைகளைக் காட்டச் சொன்னதற்கு பழைய ஆடைகளைக் காட்டினர். கேள்விகளுக்குப் பதில் தரவில்லை என பல குற்றச்சாட்டுகளை அந்தப் பெண் முன்வைத்தார்.

இது குறித்து ‘எல்வி’ நிறுவனத்தின் தலைமையகத்திற்கு புகார் அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.அதனால் கடை ஊழியர்களுக்கு தகுந்த பாடம் கற்றுத்தர இவ்வாறு செய்ததாக அப்பெண் சமூக ஊடகத்தில் கூறினார்.பெண்ணின் செயலுக்கு சிலர் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version