Site icon Tamil News

சீனாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு சிறுவர்களுக்கு கட்டுப்பாடு

கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையப் பாவனைக்கு சிறுவர்கள் அடிமையாவதில் சீன அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு சிறுவர்கள் இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதற்கு சீன அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதிய கட்டுப்பாடுகளின்படி, சீனாவில் குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 02 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பயனர்களுக்கு நாளொன்றுக்கு 02 மணிநேரமும், 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு ஒரு மணித்தியாலமும், 08 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 08 நிமிடங்களும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version