Site icon Tamil News

தைவானின் தேர்தல் விவகாரங்களில் தலையிடும் சீனா!

சீனா நடத்திய ராணுவப் பயிற்சியின் போது 40க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் அதன் வான் பாதுகாப்பு மண்டலத்தை கடந்து சென்றதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த செயலை ஆத்திரமூட்டும் செயல் என்று கூறிய தைவான், சீனா தனது நாட்டின் தேர்தல் நடைமுறையில் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான வேட்பாளராக களமிறங்கிய தைவானின் தற்போதைய துணை ஜனாதிபதி வில்லியம் லாய் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவான் நேற்றைய (19.08) தினம் இராணுவ பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தைவான் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வூ, நாட்டின் தேசிய தேர்தலை மக்களே தீர்மானிக்க வேண்டும், அண்டை நாடுகள் அல்ல என தெரிவித்துள்ளார்.

Exit mobile version