Site icon Tamil News

ஜெர்மனியில் மலிவான பயண அட்டை – எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஜெர்மனியின் எஸன் நகரத்தில் நகர சபை கூட்டத்தில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் மாணவர்களுக்கு 29 யூரோவிற்கு பயண அட்டை வழங்குவது என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஸன் நகர சபையானது சபை கூட்டத்தில் சில தீர்மானங்களை எடுத்து இருக்கின்றது.

அதாவது எஸன் நகரத்தில் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற 49 யுரோ பயண அட்டையை 29 யுரோவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானித்து இருக்கின்றது.

இதன் காரணத்தினால் 1.8.2023 இல் இருந்து எஸன் மாணவர்கள் இவ்வகையான பயண அட்டையை 29 யுரோவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

ஷோகோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற ஒரு பயண அட்டையானது ஏற்கனவே மாணவர்களுக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்நிலையில் ஷோகோ டிக்கட்டை பெறுகின்றவர்கள் ஆக குறைந்தது தமது வீட்டில் இருந்து பாடசாலைக்கான தூரமானது 3.5 கிலோ மீற்றர் ஆக இருத்தல் வேண்டும்.

ஆனால் புதிய திட்டத்தின் படி சகல மாணவர்களும் இவ்வகையான பயண அட்டையை 29 யுரோவுற்கு கொள்வனவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version