Site icon Tamil News

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – சேலம் மாவட்ட ஆட்சியாளருக்கு பிடியாணை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியதால் சேலம் மாவட்ட ஆட்சியரை உடனடியாக நேரில் முன்னிலையாகுமாறு சேலம் காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம் பஞ்சாயத்து நிதியை தவறாக கையாண்டு விட்டதாகக் கூறி சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி தம்மை பணியிடை நீக்கம் செய்து விட்டதாகவும், இந்த நடவடிக்கையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டபோதும் தமக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை என்றும் சேலம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

தமக்கு பணி வழங்க உத்தரவிடப்பட்டும் அதை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் செயல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என்று அவர் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டது. ஆனால் ஆட்சியர் நேரில் வரவில்லை. இதையடுத்து ஆட்சியர் பிருந்தா தேவிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version